இந்தியா

பிரதமர் மோடி பேசிய உரையின் ஈர்ப்புதான் நான் எழுதிய ராணுவ வீரர் அஞ்சலிக் கவிதை.. லதா மங்கேஷ்கர்.!

வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பிரபல பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கர், இந்தியில் பாடல் ஒன்றை எழுதி தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு உள்ளார் .

அது தொடர்பாக அவர் கூறுகையில், ‘பிரதமர் மோடி சில நாட்களுக்கு முன்பு ஆற்றிய உரை ஒன்றை கவனித்தேன். அதில் அவர் ஒரு கவிதையின் சில வரிகளை குறிப்பிட்டு இருந்தார்.

அது ஒவ்வொரு இந்தியரின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக இருந்தது. அந்த வரிகள் எனது மனதை தொட்டன. எனவே அந்த கவிதையை பதிவு செய்து பாடலாக வெளியிட்டு உள்ளேன்.

நாட்டின் தீரமிக்க வீரர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் இதை அர்ப்பணிக்கிறேன்’ என குறிப்பிட்டு இருந்தார்.

Tags
Show More
Back to top button
Close
Close