தமிழ் நாடு

மோடி அரசு ஆட்சிக்கு வராமல் தடுக்க வேண்டும் … தமிழக கிருஸ்தவ மிஷனரிகள் மதுரையில் கூடி முக்கிய தீர்மானம்.. வீடு, வீடாக சென்று பிரச்சாரம் செய்யவும் பிஷப்புகள் உத்தரவு.!

பணத்துக்காகவும் அல்லது கட்டாய  மத மாற்றம் கூடாது என்று வலியுறுத்தும் பாரதீய ஜனதா  மற்றும் இந்து இயக்கங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளை பிடிக்காத கிறிஸ்தவ மிஷனரிகள் மோடி அரசு வரும் மக்களவை தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று கோரி கடந்த சில வருடங்களாக கிறிஸ்தவ ஆலயங்களுக்குள்ளேயே பிரார்த்தனை கூடங்களில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

மோடி ஆட்சியை பிசாசு ஆட்சி எனவும், பிசாசை ஓட்ட வேண்டும் எனவும் கோரி கிறிஸ்தவ மக்களிடையே பீதி எழுப்பி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

குறிப்பாக தமிழகத்தில் திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ்  போன்றவர்களின் தூண்டுதலும் இந்த இயக்கங்களுக்கும் பின்னால் உள்ளது.

என்றாலும் இந்துக்கள் இடையே ஒற்றுமை ஏற்பட்டுவிட்டால் மத மாற்றம் செய்ய முடியாது மற்றும் அரசியல் விழிப்புணர்வை அவர்கள் அடைந்து விடுவார்கள், அது நம் சொகுசு வாழ்வை பாதிக்கும் என நம்பும் கிறிஸ்தவ மத அமைப்புகள் கிறிஸ்தவர்களாகிய சோனியா காந்தியையும், கிறிஸ்தவ ஆர்வலராகிய ராகுல் பிரதமர் ஆவதையே மிகவும் விரும்புகின்றன.

அதே போல இந்துக்களை அடிக்கடி புண்படுத்தி பேசும் திமுக ஆட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகளின் ஆதிக்கம் தமிழகத்தில் ஏற்படவேண்டும் என்றும் கிறிஸ்தவர்களிடையே பரப்புரை செய்கின்றன.

இந்தநிலையில்தான் கடந்த 23- 03.2009 அன்று மதுரையில் தமிழக அளவில் கிறிஸ்தவர்கள் வாழ்வுரிமை இயக்க முன்னெடுப்பு என்ற பெயரில் தமிழக ஆயர் பேரவை தலைவர் அந்தோணிசாமி பாப்புசாமி தலைமையில் மோடி அரசை கவிழ்ப்பதற்கான திட்டங்கள் வகுப்பது குறித்த கூட்டம் நடத்தினர்.

இந்த கூட்டத்தில் மோடி அரசை மீண்டும் வரவிடாமல் தடுக்கும் விதத்தில் கிறிஸ்தவர்கள் எவ்வாறு செயல்படவேண்டும் என்பது குறித்து பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 இந்த தீர்மானங்களை தமிழகத்திலுள்ள கிறிஸ்தவர் அனைவரிடமும் வீடு வீடாக கொண்டு செல்லும் பொறுப்பு ஒவ்வொரு பிஷப்களிடமும் ஒப்படைக்கப்பட்டது.

அதன்படி சென்னைக்கு அருகில் உள்ள செங்கல்பட்டு பிஷப் நீதிநாதன் இந்த பொறுப்பை எப்படி நிறைவேற்ற வேண்டும் என கூறியதுடன், மேற்படி தீர்மானங்களையும் வெளியிட்டுள்ளதை இந்த செய்தியின் கீழுள்ள பி.டி.எப் இணைப்புகளை படித்து தெரிந்து கொள்ளலாம்.  

Tags
Show More
Back to top button
Close
Close