தமிழ் நாடு

தமிழகத்தில் அ.தி.மு.க.வா.? தி.மு.க.வா.? எந்த கூட்டணி வெற்றிபெறும்.. உளவுத்துறை அதிர்ச்சியான தகவல்.!

தமிழகத்தில் தேர்தல் நிலவரம் தொடர்பாக மத்திய உளவுத்துறை மத்திய அரசுக்கு அனுப்பிய தகவலில் அதிமுக கூட்டணிக்கு அதிர்ச்சி அளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் மத்திய, மாநில அரசுகள் உளவுத்துறை மூலமாக தங்களின் வெற்றி எப்படி என்று தெரிந்து கொள்வதற்காக அறிக்கைகளை தயார் செய்வதற்கு பயன்படுத்திக் கொள்வதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் தற்போது தமிழகத்தில் எந்த மாதிரியான சூழல் உருவாகியுள்ளது என்று மத்திய உளவுத்துறை தமிழக பிரிவிடம் அறிக்கை கேட்டதாக தெரிகிறது.

அதிமுக தலைமையில், பாமக, பாஜக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணியாக உருவாகியுள்ளது.

அதே போன்று திமுக தலைமையில், காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட சிறு கட்சிகளை இணைத்து கூட்டணி அமைத்துள்ளது.

இந்நிலையில், இதில் திமுக தலைமையில் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்று திமுகவை சேர்ந்தவர்கள் தங்கள் ஐடிவிங் சார்பாக பொய்யான தகவலை பரப்பி வருவதாக கூறப்படுகிறது.

ஆனால், களநிலவரம் அப்படி இல்லை என்றும் அதிமுக தலைமையிலான கூட்டணி 30க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், இது தேர்தல் சமயத்தில் அதிகரிக்கும் என்றும் உளவுத்துறை தெரிவித்துள்ளது. திமுக கூட்டணிக்கு ஒரு சிலர் மத்தியில் மட்டுமே ஆதரவு இருக்கிறது.

அப்படியே ஆதரவு இருந்தாலும், மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், நாம் தமிழர் போன்ற கட்சிகள் தனித்து போட்டியிடுவதால் எதிர்கட்சிகளுக்கு செல்லக்கூடிய வாக்குகள் சிதறும் என்பது அந்த அணிக்கு பலவீனம் என்று உளவுத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close