சினிமா

நடிகை வரலட்சுமி படப்பிடிப்பில் சிலிண்டர் வெடிப்பு.. வேடிக்கை பார்த்த அப்பாவி ரசிகர்கள் பரிதாபமாக உயிரிழப்பு.!

நடிகர் அர்ஜுனின் அக்கா மகன் சிரஞ்சீவி சர்ஜா மற்றும் சரத்குமார் மகள் வரலட்சுமி நடிக்கும் ரனம் என்ற கன்னட படத்தின் படப்பிடிப்பு பெங்களூரின் சுற்றுப்புற பகுதிகளில் நடந்து வருகிறது.

இன்று மதியம் பாகலூரு என்ற இடத்தில் உள்ள ஷெல் கேஸ் கம்பெனி அருகில் படப்பிடிப்பு நடந்தது.

காரை வெடிக்க வைக்கும் காட்சியின் போது கேஸ் சிலிண்டர் வெடித்ததில் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்த ஒரு சுமைரா ( 28), ஆய்ரா என்ற 8 வயது சிறுமி உடல் சிதறி பலியானார்கள்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்தவர்களின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags
Show More
Back to top button
Close
Close