2019 தேர்தல்

மாமன்..மச்சான் உறவு அப்புறம்தான்.. ஆரணியில இரட்டை இலை ஜெயிச்சாகனும்: தொண்டர்களிடம் ராமதாஸ் ஸ்ட்ரிக்ட்டான உத்தரவு.!

ஆரணி தொகுதியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும், பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணியின் மைத்துனர் விஷ்ணுபிரசாத்தை தோற்கடிக்க கடுமையாக வேலை செய்ய வேண்டும் என கட்சி தொண்டர்களுக்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் வேட்பாளராக, ஆரணி தொகுதியில், விஷ்ணு பிரசாத் போட்டியிடுகிறார். இவர், பா.ம.க., இளைஞரணி தலைவர், அன்புமணியின் மனைவி சவுமியாவின் அண்ணன். அ.தி.மு.க.,வுடன், பா.ம.க., கூட்டணி வைத்ததும், ராமதாசையும், அன்புமணியையும், விஷ்ணு பிரசாத் கடுமையாக விமர்சனம் செய்தார்.

தற்போது, ஆரணியில், அ.தி.மு.க., வேட்பாளராக, ஏழுமலை போட்டியிடுகிறார்.

இந்த தொகுதி, பா.ம.க., நிர்வாகிகள், சமீபத்தில், ராமதாசை சந்தித்த போது, ‘விஷ்ணு பிரசாத்தை தோல்வியடைய செய்வது தான் முதல் வேலை. சொந்த பந்தம் எல்லாம் அப்புறம் தான். ஏழுமலை வெற்றிக்கு தீவிரமாக வேலை செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close