2019 தேர்தல்

கோவையில் வருகிற 8-ந் தேதி பிரச்சார பொது கூட்டம்.. பிரதமர் மோடியுடன் விஜயகாந்த் உட்பட கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு..!

பிரதமர் நரேந்திரமோடி 8-ந் தேதி கேரள மாநிலம் பத்தினம் திட்டாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அந்த கூட்டத்தை முடித்துக்கொண்டு தனி விமானம் மூலம் அவர் கோவை விமான நிலையம் வருகிறார்.

விமான நிலையத்தில் இருந்து அவர் கார் மூலம் பொதுக்கூட்டம் நடக்கும் கொடிசியா மைதானத்துக்கு மாலை 6 மணிக்கு வருகிறார். பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

 இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் -அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களான பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

கோவை பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு பிரதமர் அன்று இரவே விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.

Tags
Show More
Back to top button
Close
Close