2019 தேர்தல்

பிரதமர் மோடி ஏப்ரல் 8 ம் தேதி தமிழகம் வருகிறார்.. கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம்..!

அதிமுக கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 8 ம் தேதி தமிழகம் வர உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி, நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக தலைமையில் அமைந்துள்ள பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 8ம் தேதி தமிழகம் வர உள்ளார்.

அதே போன்று, பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா ஏப்ரல் 2ம் தேதி அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்களக்கு ஆதரவு திரட்டுகிறார்.

Tags
Show More
Back to top button
Close
Close