இந்தியா

“மிஷன் சக்தி” சோதனை திட்டம் நிறைவேற 2 ஆண்டுகளுக்கு முன்புதான் மத்திய அரசால் அனுமதி வழங்கப்பட்டது: பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் ஜி.சதீஷ் ரெட்டி.!

“மிஷன் சக்தி” விண்வெளி சாதனை திட்டம் 20 ஆண்டுகால இந்திய விஞ்ஞானிகளின் முயற்சி திட்டம் என்றாலும் மற்ற வல்லரசு நாடுகளுக்கு இணையாக இதை சோதித்து பார்க்க இதற்கு முன் இருந்த காங்கிரஸ் அரசுக்கு துணிவோ ஆர்வமோ இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் ஜி.சதீஷ் ரெட்டி இந்த சாதனை திட்டத்தை நிறைவேற்றுவதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்புதான் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அனுமதி வழங்கியதாக கூறியுள்ளார்.

நேற்று காலை 11.45 மணியளவில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற போவதாக தகவல் வெளியானது. இதனால், நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

அவர் ஏதேனும் சலுகை அறிவிப்புகளை வெளியிடப்போகிறாரோ என்று கருதப்பட்டது. இந்த நிலையில், பகல் 12.23 மணிக்கு பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார்.

அப்போது, விண்வெளி துறையில் இந்தியா படைத்த புதிய சாதனையை அவர் அறிவித்தார். அவர்  “ விண்வெளியில் சுற்றி வரும் செயற்கைகோளை சுட்டு வீழ்த்தும் (ஏவுகணை மூலம்) ‘மிஷன் சக்தி’ திட்ட சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தி உள்ளது என்றார்.  

மேலும், வெறும் 3 நிமிடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும், முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளது நமது நாட்டின் அரிய சாதனை ஆகும்.

அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளுக்கு பிறகு 4-வது நாடாக இந்த சாதனையை இந்தியா செய்துள்ளது. இதன்மூலம், இந்தியா விண்வெளி வல்லரசாக உயர்ந்து நிற்கிறது. இதனால், இந்தியா மேலும் வலிமையாகவும், பாதுகாப்பாகவும் திகழும் என்றார்.

2 ஆண்டுகளுக்கு முன்புதான் அனுமதி

மிகவும் ரகசியமாக மேற்கொள்ளப்பட்ட ‘மிஷன் சக்தி’ திட்டம் குறித்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் ஜி.சதீஷ் ரெட்டி நிருபர்களிடம் கூறுகையில், ‘விண்வெளியில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசு அனுமதி வழங்கியதாக தெரிவித்தார்.

ஒடிசா மாநிலம் அருகே உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து 3 நிலைகளை கொண்ட ஏவுகணை ஏவப்பட்டதாகவும், அது விண்வெளியில் உள்ள குறிப்பிட்ட இலக்கை (செயற்கைகோள்) திட்டமிட்டபடி துல்லியமாக தாக்கி அழித்ததாகவும், இது முழுக்க முழுக்க இந்திய விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட திட்டம் என்றும் அவர் கூறினார்.

Tags
Show More
Back to top button
Close
Close