தமிழ் நாடு

என் கட்சிக்கு ஓட்டு போடலனா யாரும் சாப்பிடகூடாது.. விஷ ஊசி போட்டு சாகடிச்சிடுவன்.. சீமான் கொந்தளிப்பு.!

கடலூர் மாவட்டம், வடலூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அக்கட்சியின் நாடாளுமன்ற கடலூர் வேட்பாளர் சித்ரா, சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சிவஜோதி ஆகியோரை அறிமுகம் செய்து விவசாயி சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, ஜெயலலிதாவுக்கு உடல்நலம் சரியில்லை எனில் அப்போலோ மருத்துவமனைக்கு சென்றார். அதே போன்று கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும் காவேரி மருத்துவமனைக்கு செல்கிறார். அப்படியெனில், அரசு மருத்துவமனையின் நிலை என்ன? அரசை வழி நடத்துபவர்களே அரசு மருத்துவமனையை நம்பி சிகிச்சைக்கு செல்லவில்லை.

ஒரு வேளை ஜெயலலிதா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் 70 நாளில் போன உயிர் 7 நாளில் போயிருக்கும். அரசு மருத்துவமனையில் தரம் இல்லை.

முதலமைச்சர் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் கட்டாயமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என நாங்கள் சட்டம் கொண்டு வருவோம். ஒரு பைசா லஞ்சம் ஊழல் இருந்தால் என்று தெரியவந்தால் விஷ ஊசி போட்டு கொன்றுவிடுவோம்.

விவசாயி சின்னத்துக்கு நீங்கள் ஓட்டு போடவில்லை என்றால், ஒருவரும் சோற்றை திங்க கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

Tags
Show More
Back to top button
Close
Close