கோவை பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

அவர் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில், திமுகவின் கோவை புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் மகன் மணிமாறனுக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.

மேலும், அவர் 28ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வழக்கில் அ.தி.மு.க-வின் பொள்ளாச்சி ஜெயராமன் அவர்களையும் அ.தி.மு.க-வையும் சம்மந்த படுத்தி தி.மு.க போராட்டம் நடத்தியது. சில நாட்கள் கழித்து இந்த விவகாரம் தொடர்பாக மயான அமைதி காத்து வருகிறது தி.மு.க. இந்நிலையில், தி.மு.க பிரமுகரின் மகனுக்கு சம்மன் அனுப்பட்டுள்ள நிலையில், தற்போதும் தி.மு.க போராட்டம் நடத்துமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுப்பப்பட்டு வருகிறது.

Share