இந்தியா

பாஜகவில் இணைந்த என்.டி.ஆர் மகள் புரந்தேஸ்வரி விசாகப்பட்டணம் தொகுதியில் போட்டி: களை கட்ட தொடங்கியது ஆந்திர அரசியல்.!

ஆந்திராவில் பா.ஜ.க வின் முதல் வேட்பாளர் பட்டியலில், முன்னாள் காங். மத்திய பெண் அமைச்சர், புரந்தேஸ்வரி, 60, பெயர் இடம்பெற்று உள்ளது. இதனால் ஆந்திர அரசியலில் பிஜேபி கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏப்., 11ல், லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலையும் சந்திக்க உள்ள ஆந்திராவில், பா.ஜ.க சார்பில் போட்டியிடும், 184 பேர் அடங்கிய முதல் வேட்பாளர்கள் பட்டியலை, அக்கட்சி மேலிடம் வெளியிட்டது. அதில், முன்னாள் மத்திய அமைச்சர் புரந்தேஸ்வரி பெயர் இடம் பெற்றுள்ளது, என்.டி.ஆர்., குடும்ப உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

புரந்தேஸ்வரி, 2014ல் காங்கிரசில் இருந்து விலகி, பா.ஜ.க வில் சேர்ந்தார். அப்போது, கடப்பா மாவட்டம், ராஜம்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு, தோல்வியை தழுவினார்.

தற்போது, விசாகப்பட்டினம் தொகுதி வேட்பாளராக, புரந்தேஸ்வரியை, பா.ஜ.க மேலிடம் அறிவித்துள்ளது. ஐந்தாண்டுகளாக வேறு கட்சிக்கு மாறாமல், பா.ஜ.க விலேயே இருக்கும் அவரையும், என்.டி.ஆரையும் கவுரவப்படுத்தும் விதமாக, அவருக்கு மீண்டும், ‘சீட்’ வழங்கப்பட்டுள்ளது.

புரந்தேஸ்வரிக்கும் சந்திரபாபு நாயுடுக்கும் எப்போதும் ஆகாது. இருவரும் பரம எதிரிகள் . முன்பொருமுறை நாடாளுமன்றத்தில் ராமாராவ் சிலை வைக்க சந்திர பாபு நாயுடு முயன்றபோது அப்போது காங்கிரஸ் அமைச்சராக இருந்த புரந்தேஸ்வரி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

தனது தகப்பனார் ராமராவ் முதுகில் குத்திய உங்களுக்கு சிலை வைக்க தகுதியில்லை என்றார்.  
இந்த நிலையில் புரந்தேஸ்வரிக்கு பாஜக அளிக்கும் முக்கியத்துவத்தை ஆந்திராவில் மக்கள் கவனத்துடன் பார்க்கின்றனர்.  

Tags
Show More
Back to top button
Close
Close