உத்திர பிரதேச மாநிலம், கிழக்கு மண்டல காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா வத்ரா, சமீபத்தில் கங்கை நதியில் ஸ்டீமர் படகிலும், சாலை மார்க்கமாகவும், நடைபாதையாகவும் பிரசாரம் செய்யப் போவதாக அறிவித்திருந்தார். அதன் படி சமீபத்தில் கங்கைக்கு பூஜை செய்த பிறகு படகில் தனது பயணத்தை துவக்கினார். பிரயாக்ராஜ் முதல் வாரணாசி வரை 3 நாட்கள் பயணம் செய்து, மக்களை சந்தித்து பிரசாரம் செய்தார்.

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிதின் கட்காரி கூறுகையில், நாங்கள் அலகாபாத் – வாரணாசி இடையே நீர்வழிச்சாலை அமைக்கா விட்டால் பிரியங்காவால் எப்படி நீர்வழியாக பயணம் செய்ய முடியும்? கங்கை நதியையும் அவர் குடித்தார். காங்கிரஸ் ஆட்சியின் போது இது போல் அவரால் செய்ய முடிந்ததா? 2020 ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கங்கை நதி 100 சதவீதம் தூய்மைபடுத்தப்படும் என்றார்.

Share