ஏழைகளுக்கு வருடத்துக்கு ரூ.72,000 நிதி வழங்கும் ராகுல் காந்தியின் திட்டத்தை அமல்படுத்த வாய்ப்பே இல்லை என நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.

ஏழைகளுக்கு ஒவ்வொரு மாதத்திற்கும் ரூ.6,000 என்ற வகையில் ஆண்டுக்கு ரூ.72,000 அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

சிறு, குறு விவசாயிகளுக்கு மாதம் 500 வீதம் ஆண்டுக்கு 6,000 நிதியுதவி வழங்கப்படும் என்ற பாஜகவின் திட்டத்தை விட ராகுலின் இந்த வாக்குறுதி வெத்து அறிவிப்பாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பின் துணைத்தலைவர் ராஜீவ் குமார் கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதி பணி மனப்பான்மைக்கு எதிராக அமைவதுடன், நிதி ஒழுங்குமுறையை சிதற செய்துவிடும் என்றும், இந்த திட்டத்தை செயல்படுத்த எங்கிருந்து நிதி வரும் என்று கேள்வி எழுப்பினார்.

Share