பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், நல்ல நேரம் முடியப் போவதாகக் கூறி ஏற்கெனவே வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த சுயேட்சை வேட்பாளர் ராஜேந்திரன் என்பவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்.

இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. மேலும், தேர்தல் விதிகளை மீறி 10க்கும் மேற்பட்டவர்களோடு ஆட்சியர் அலுவலகத்துக்குள் வந்திருந்தார்.

Share