2019 தேர்தல்

முதல்வர் பழனிசாமிக்கு உடல் நலக்குறைவு.. காலை பிரச்சாரம் ரத்து.!

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதான கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

அந்த வகையில், அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல் அமைச்சர் பழனிசாமி, கடந்த சில நாட்களாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று சென்னையில் பல இடங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இன்று காலை மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் சாம்பாலுக்கு ஆதரவாக காலை 8.30 மணியளவில் திருவல்லிக்கேணியில் இருந்து பிரசாரம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக முதல் அமைச்சர் பழனிசாமியின் காலை பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. முதல் அமைச்சர் பழனிசாமி மாலை பிரசாரம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close