பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை தீபா மாலிக் ஆவார். இவர், பிரதமர் மோடியின் வளர்ச்சி திட்டங்களால் கவரப்பட்டு பா.ஜ.க-வில் இணைந்துள்ளார்.

Tweet by Polimer News

ஹரியானா மாநில பா.ஜ.க தலைவர் சுபாஷ் பராலா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் அக்கட்சியில் தன்னை அவர் இணைத்துக்கொண்டார். அப்போது, அம்மாநில பா.ஜ.க-வினர் அவரை உற்சாகமாக வரவேற்றனர்.

Tweet by ANI

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக கட்சியில் இணைந்துள்ளதால்  ஹரியானா மாநிலத்தின் ஏதேனும் ஒரு மக்களவைத் தொகுதியில், பா.ஜ.க வேட்பாளராக தீபா மாலிக் களமிறக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Share