2019 தேர்தல்செய்திகள்

பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் 16 லட்சம் ஏழைகளுக்கு இலவச வீடுகள் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி

மத்தியில் 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த தி.மு.க தமிழகத்திற்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்று கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் 16 லட்சம் ஏழைகளுக்கு இலவச வீடுகள் கட்டித்தரப்படுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரத்தை சேலத்தில் தொடங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஊர்தோறும் வேனில் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஒவ்வொரு நாளும் தொடர்ந்து பல ஊர்களில் பேசிவருவதால் தொண்டை பாதிக்கட்ட நிலையில் அவரது பிரசார பயணம் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர்,  வலிமையான பிரதமரான மோடி ஆட்சியில் தான் நாடு பாதுகாப்பாக இருக்கும் என்றார். பயங்கரவாதிகளையும், பாகிஸ்தானையும் விரட்டியவர் மோடி என்றார். 

அ.தி.மு.க – கூட்டணி இதுவரை என்ன செய்தது என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் எழுப்பிய கேள்வியை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், தி.மு.க ஆட்சியில் மின்வெட்டால் தமிழகம் இருளில் மூழ்கி கிடந்ததை நினைவு கூர்ந்தார்.  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆட்சியில் தான் தமிழகம் மின் மிகை மாநிலமானது என்றார்.

Tweet by Polimer News

திமுக-காங்கிரஸ் கூட்டணி 15 ஆண்டுகளில் என்ன சாதனை செய்தது என்று முதலமைச்சர் கேள்வி எழுப்பினார். மத்தியில் மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் 16லட்சம் வீடு இல்லா ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற அவர், தமிழகத்தில் வீடில்லா ஏழைகளே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும் என்று கூறியதாக பாலிமர் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது தமிழகத்திற்கு உரிய நிதி கொடுத்தாரா என்பதை மக்கள் சிந்தித்து பாக்க வேண்டும் என்ற அவர், பா.ஜ.க தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்தால் நிச்சயம் அனைத்து திட்டங்களும் தமிழகத்திற்கு நிறைவேற்றப்படும் என்றார்.

Tags
Show More
Back to top button
Close
Close