சென்னையில் 2015ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பேய் மழை பெய்தது. இதில் சென்னை நகரமே மழை நீரால் தத்தளித்து கொண்டிருந்தது. அப்போது பொதுமக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள்.

அந்த சமயத்தில் அரசு மற்றும் இளைஞர்கள் ஒன்று திரண்டு உணவு, உடை, குடிநீர் போன்றவற்றை செய்து கொண்டனர். ஆனால் நடிகர் கமல் நான்கு சுவற்றுக்குள் இருந்து வெற்று அறிக்கைகளை விட்டு கொண்டிருந்தார்.

வீட்டின் மாடியில் இருந்த படி சென்னை நகரத்தை பார்த்து கொண்டிருக்கிறேன் என்று ஒன்றுக்கும் உதவாத அறிக்கைகளை விட்டு தன்னை பிரபலபடுத்திக்கொண்டார்.

அதே போன்றுதான் இப்போதும் ஒரு கட்சியை உருவாக்கி கொண்டு தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றுகிறேன் என்று கூறி கொண்டிருக்கிறார்.

ஆனால் அவரால் பொதுமக்களுக்கு எந்த ஒரு பிரயோஜனமும் கிடையாது. மக்களை ஏமாற்றவே அவர் ஒரு கட்சியை ஆரம்பித்து தன்னை பிரபலபடுத்திக்கொண்டுள்ளார்.


Share