நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வைரலாகி வருகிறது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்குகிறார்.

ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்க்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இப்படத்திற்கு ‘நேர்கொண்ட பார்வை’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்தப்படத்தில் அஜித்துடன் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் ஷூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நேர்கொண்ட பார்வை படத்தின் நாயகிகள் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங் உள்ளிட்டோர் இருக்கும் புகைப்படம் முதன் முறையாக வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் அஜித் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Share