செய்திகள்

குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் 10 லிட்டர் பிராந்தி இலவசம் : திருப்பூர் சுயேட்சை வேட்பாளர் ஷேக் தாவூத்

குடும்ப உறுப்பினர் ஒவ்வொருக்கும் 10 லிட்டர் பிராந்தி கொடுப்பேன், ஏழை பெண்களுக்கு 10 சவரன் நகையும் 10 லட்சம் ரூபாய் செலவில் திருமணம் செய்து வைப்பேன் என திருப்பூர் சுயேட்சை வேட்பாளர் ஷேக் தாவூத் வாக்குறுதி அளித்துள்ளார்.

Tweet by Megha Kaveri, Journalist at The News Minute

ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்தவர் சேக் தாவூத் என்ற டெய்லர். இவர் திருப்பூர் தொகுதியில் சுயேட்சை வேட்பளராக களம் இறங்குகிறார். இவர் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து திருப்பூர் மக்களவை தேர்தலில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தேன். நான் 15 தேர்தல் வாக்குறுதிகள் வைத்துள்ளேன். 

முதலில் எனது தொகுதியில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் ₹25,000 உதவி தொகையை அரசிடமிருந்து பெற்றுத்தருவேன். பின்னர் ஒவ்வொரு குடும்பத்திலுள்ள நபர் ஒன்றுக்கு மாதம் 10 லிட்டர் பிராந்தி சுத்தமானதாக பாண்டிச்சேரியிலிருந்து பெற்றுத்தருவேன். 

அனைத்து மத பெண்களுக்கும் திருமணத்திற்கு 10 பவுன் நகை, 10 லட்சம் பணம் பெற்றுத் தருவேன். மேலும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த கூடாது என டெல்லியில் தொடர்ந்து போராடுவேன்”, என வாக்குறுதிகளை அள்ளிவீசியுள்ளார். அவர் பேசிய காணொளி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Picture Courtesy : The News Minute

Tags
Show More
Back to top button
Close
Close