தமிழ் நாடு

புஷ்பவனம் குப்புசாமி, மனைவி அனிதா வந்த காரில் சோதனை: பணத்தை கைப்பற்றி திருப்பி அளித்த தேர்தல் அதிகாரிகள்.!

தமிழகத்தில் ஏற்கனவே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் பலராலும் அறியப்பட்ட நாட்டுப்புற பாடல் பாடும் பிரபலங்கள் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவரின் மனைவி அனிதா. பல இடங்களில் கச்சேரிகள் நடத்தி வருகின்றனர்.

சினிமாவிலும் சில பாடல்களை பாடியுள்ளார்கள். இந்தவேளையில் அவர்கள் சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில் உள்ள வன்னிய மகாராஜா கோவில் கும்பாபிஷேக விழாவில் கச்சேரி முடித்துவிட்டு சேலம் திரும்பியுள்ளார்கள்.

அப்போது அவர்கள் வந்த காரை தடுத்து நிறுத்திய தேர்தல் பறக்கும் படை அவர்களிடம் இருந்த ரூ 57 ஆயிரம் பணத்தை ஆவணம் இல்லாமல் எடுத்துச்சென்றாக கூறி கைப்பற்றியுள்ளனர்.

இதன் காரணமாக குப்புசாமி அனிதா இருவரும் பறக்கும் படையினருடன் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவில் குழு இது அவர்களுக்கு கச்சேரிக்காக கொடுத்த சம்பளம் என சொல்லி பேப்பரில் கையெழுத்திட்ட பின்னர் தான் தேர்தல் படை அந்த பணத்தை திருப்பி குப்புசாமியிடம் ஒப்படைத்திருக்கின்றனர். இதனால் அங்கு சிறிது நேர பரபரப்பு நிலவியது.

Tags
Show More
Back to top button
Close
Close