தமிழ் நாடு

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்தார் ஹெச்.ராஜா.!

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு கோயம்புத்தூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, சிவகங்கை ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான வேட்பாளர் பட்டியலும் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அதன்படி, சிவகங்கை தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் தேசியச் செயலர் ஹெச்.ராஜா போட்டியிடுகிறார். ஏற்கனவே தெரிவித்தபடி அவர் இன்று சிவகங்கை தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் அவர் தனது வேட்புமனுவை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நான் பிறந்ததில் இருந்து காரைக்குடியில் வசித்து வருகிறேன். எனவே சிவகங்கை தொகுதியில் மக்களுக்கு தேவையானவற்றை செய்வேன். எங்கேயோ இருந்து கண்ணாடி வழியாக சிவகங்கையை பார்க்க மாட்டேன். கண்டிப்பாக இந்த தேர்தலில் வெற்றி பெறுவோம்” என்று பேசினார்.

முன்னதாக ராஜா வேட்புமனு தாக்கல் செய்யும் முன்பு அங்குள்ள பிரசித்திபெற்ற கோவில்களில் தேங்காய் உடைத்து வழிபட்டார். ஏராளமான தொண்டர்கள் காவி துண்டு அணிந்தும் மற்றும் பாஜக கொடிஏந்தியும் அவர் பின் திரண்டனர்.  அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சூழ வேட்புமனு தாக்கல் செய்தார்.

Tags
Show More
Back to top button
Close
Close