இந்தியா

வருமானத்தில் ஸ்ரீ ஏழுமலையானை விஞ்சிய சந்திரபாபு நாயுடு.. 5 ஆண்டுகளில் ரூ.667 கோடியாக சொத்துக்களை வளர்த்து அசத்தல்.!

பக்தர்களால் ஏழுமலையான் என அன்புடன் அழைக்கப்படுபவர் கடவுள் ஸ்ரீ வெங்கடாசலபதி. இவருடைய அருளால் பொருளை பெற்ற பக்தர்கள் கோடி, கோடியாக பொன்னையும், பொருளையும், பணத்தையும் மலை, மலையாய் அள்ளி கொடுத்து வருகிறார்கள். குபேரனின் மருமகனான இவரைவிட ஆந்திராவில் இன்னொரு அரசியல் தலைவர் குபேரனாக அறியப்பட்டுள்ளார்.

அவர்தான் தன்னை ஆந்திர விவசாயிகளின் நண்பன் என்று தன்னை தானே அழைத்துக் கொள்ளும் முதல்வர் சந்திரபாபு நாயுடு.

இந்திய நாட்டிலேயே பணக்கார முதல்-மந்திரி என்ற பெயரையும் ஆந்திர முதல்-மந்திரி நாயுடு பெற்றுள்ளார்.

கடந்த 2014–ம் ஆண்டு ஆந்திர சட்டசபை தேர்தலின்போது குப்பம் தொகுதியில் அவர் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் குடும்ப சொத்தின் மதிப்பு ரூ.177 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்போது அவர் குப்பம் சட்டசபை தொகுதியில் வேட்புமனுவுடன் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் 2017–18 நிதி ஆண்டில் வருமானம் ரூ.64 லட்சத்து 73 ஆயிரத்து 203 என குறிப்பிட்டுள்ளார். கார் உள்ளிட்ட அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.47 லட்சத்து 38 ஆயிரத்து 67 என்று கூறி இருக்கிறார்.

சந்திரபாபு நாயுடுவுக்கு ரூ. 19 கோடியே 96 லட்சத்து 95 ஆயிரத்து 474 கோடி அசையா சொத்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரிக்கு ரூ.648 கோடியே 13 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஹெரிடேஜ் புட்ஸ் நிறுவனத்தில் உள்ள பங்குகளின் மதிப்பு மட்டுமே ரூ.545 கோடியே 77 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இருவரது சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ.667 கோடி ஆகும்.

கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மனைவி சொத்து மதிப்பு 3 மடங்குக்கு மேலாக பெருகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திரபாபு நாயுடு மகன் நர லோகேஷ் மங்களகிரி நாடாளுமன்ற தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் தனது வேட்புமனுவில் தந்தை சந்திரபாபு நாயுடுவின் பெயரை கணவர் என குறிப்பிட்டுள்ளார்.

இதே தவறை சந்திரபாபு நாயுடுவும் குப்பம் சட்டசபை தொகுதி வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் தனது தந்தை கர்ஜூரா நாயுடு பெயரை கணவர் என்ற இடத்தில் குறிப்பிட்டார்.

மேலும் நாயுடுவின் மகன், மகள் பேரப்பிள்ளைகள் பெயரில் தாத்தா, பாட்டி சொத்துக்களை விட அதிக அளவில் சொத்துள்ளதாகவும் செய்திகள் வந்தன. இந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவின் மிக வேகமான சொத்து, வருமான வளர்ச்சி அங்கு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close