தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் மகனும் திரைப்பட நடிகரும், மூன்றாம் கலைஞர் என்று உடன் பிறப்புகளால் அழைக்கப்படும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆத்தூரில் தி.மு.க வேட்பாளர், முன்னாள் அமைச்சர் க.பொன்முடியின் மகன் கவுதம சிகாமணியை ஆதரித்து அவர் திறந்த வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஸ்டாலின் மகனின் வியர்வையை பொன்முடியின் மகன், தனது துண்டால் துடைத்தபடி இருந்தார் என்று தந்தி டிவி செய்தி வெளியிட்டுள்ளது.

இதை தொடர்ந்து, தி.மு.க-வினர்களை கொத்தடிமைகள் என்று விமர்சித்து ட்விட்டர் வாசிகள் பதிவிட்டு வருகின்றனர்

Share