தமிழ் நாடு

மீண்டும் பா.ம.க.விற்கு கிடைத்த மாம்பழம் சின்னம்.. தொண்டர்கள் உற்சாகம்.!

தமிழகத்தின் பிரபலமான கட்சியாக இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு தமிழ்நாட்டில் அதிகாரம் இல்லை என்றால் அனைவருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆம் அவர்களது அங்கீகாரம் கடந்த தேர்தலின் போது 0.7 சதவீத வாக்குகளால் பறிபோனது.

இதற்கு தேர்தலில் தனியாக போட்டியிட்டது ஒரு காரணம் என்று அரசியல் விமர்சகர் தெரிவித்தனர். இதனால் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்த நிலையில் அவர்களுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்க முடியாத நிலையில் தேர்தல் ஆணையம் இருந்தது.

ஆனால் பாண்டிச்சேரி பொறுத்த வரையில் அங்கே பாமக ஒரு அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்பதால் அவர்களுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்படும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் தமிழக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்தனர்.
பாண்டிச்சேரியில் மாம்பழ சின்னம் ஒதுக்கப்படும் நிலையில் தமிழகத்துக்கும் அந்த உத்தரவு செல்லும்.

எனவே இதன் மூலம் தமிழகத்துக்கும் மாம்பழ சின்னம் ஒதுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாமக தொண்டர்கள் மிகவும் உற்சாகத்துடன் தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர்.

Tags
Show More
Back to top button
Close
Close