நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதற்கு பதிலாக இடதுசாரிகளை தோற்கடித்து பாஜகவை ஜெயிக்க வைக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

நாடெங்கும் பிஜேபியை வீழ்த்த கம்யூனிஸ்டுகளும், காங்கிரசும் கை கோர்த்துள்ளனர். ஆனால் கேரளாவில் மட்டும் அதிகாரம் பிடிக்கும் அரசியலுக்காக எலியும், பூனையும் போல எதிர்த்துக் கொள்கின்றனர்.

கடந்த 35 ஆண்டுகளாக இரு கட்சிகளுமே மாறி, மாறி ஆட்சி செய்து வரும் நிலையில் தற்போது பல பிரச்சினைகளில் கேரள மக்கள் மத்தில் பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது.

பழைய காங்கிரஸ் தலைவர்களும் இப்போது கேரளாவில் உற்சாகம் குறைந்து காணப்படுவதாக கூறப்படுகிறது. ஐயப்பன் கோவில் விவகாரத்தில் அனைத்து இந்து மக்களும்  பினராயி அரசின் மீது கோபமாக உள்ளனர். 

இந்த நிலையில் கேரளாவில் காங்கிரசின் நிலை சரியாதவாறு பார்த்துக் கொள்ளும் கட்டாயம் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே கேரள வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டால் அதன் மூலம் செல்வாக்கை காப்பாற்றிக் கொள்ளலாம் என காங்கிரஸ் தலைமை கருதுகிறது.

கேராளவில் ராகுல் காந்தி போட்டியிட போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு பதில் அளித்துள்ள பினராயி விஜயன், ராகுல்காந்தி கேரளாவுக்கு வருவது பாஜகவுடன் போட்டியிடுவதற்காக அல்ல என்றும் இடதுசாரிகளுடன் போட்டியிடவே அவர் வருவதாகவும் கூறினார்.

பாஜகவை எதிர்க்கும் நிலையில் இரு கட்சிகளும் இருக்கும் போது இன்றைய நிலையில் இது தேவைதானா என்பதை காங்கிரஸ் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Share