தமிழ் நாடு

ப.சிதம்பரம் போல இருக்க மாட்டேன் : மக்களோடு மக்களாக இருப்பேன்.. சிவகங்கை பிரச்சாரத்தில் எச்.ராஜா.!

ப. சிதம்பரம் போல சிவகங்கையை கண்ணாடி வழியாகப் பார்க்க மாட்டேன். மக்களோடு மக்களாக இருப்பேன் என பாஜக தேசிய செயலாளரும்,சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளருமான எச். ராஜா தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடந்தது. அமைச்சர் பாஸ்கரன், அதிமுக மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் எம்பி தலைமை வகித்தனர். மானாமதுரை அதிமுக வேட்பாளர் நாகராஜன், சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர் எச்.ராஜா அறிமு கப்படுத்தப்பட்டனர்.

இதில் எச்.ராஜா பேசியதாவது: பாஜக ஆட்சியில் அனைவருக்கும் வங்கிக் கணக்கு தொடங்கி உள்ளோம். அதேபோல, 8 கோடி ஏழைகளுக்கு எரிவாயு இணைப்பு கொடுத்துள்ளோம். ஜெயலலிதா இறந்ததும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எப்படியாவது முதல்வர் ஆகிவிடலாம் என்ற ஆசையில் இருந்தார்.

18 தொகுதிகளில் வென்றுவிடலாம் என்று இருந்தவருக்கு அதிமுக, பாமக, பாஜக கூட்டணி அமைத்ததும் நிலை தடுமாறிவிட்டார். 

2021 வரை அதிமுக ஆட்சி நீடிக்கும். ப.சிதம்பரம் போல் இந்தியா என்ற கண்ணாடியில் இருந்து சிவகங்கையையோ, சிவகங்கை என்ற கண்ணாடியில் இருந்து இந்தியாவையோ பார்க்கமாட்டேன். மக்களோடு மக்களாக இருப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

Tags
Show More
Back to top button
Close
Close