தமிழ் நாடு

10க்கு 6 பொருத்தம் இருந்ததால் தி.மு.கவுக்கு தாவினேன்.. அந்தர் பல்டி அடிக்கும் பாரிவேந்தர்.!

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர், பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில், திமுக,- காங்., உள்ளிட்ட, கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது, அவர் கூறியதாவது:

கடந்த 2014ம் ஆண்டு நடந்த தேர்தலில், பாஜ உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு தோல்வியடைந்த பின்னர் அது மக்கள் விரும்பாத கட்சி என்று தெரிந்தது.

தற்போது, திமுக கூட்டணியில் சேர்ந்துள்ளேன். இது, சந்தர்ப்பவாத கூட்டணி இல்லை. திருமணத்துக்கு, 10 பொருத்தம் பார்ப்பர். ஆனால், ஆறு, ஏழு பொருத்தம் இருந்தால போதும் என்பார்கள். அதுபோல, ஆறு பொருத்தம் உள்ளதால் இந்த கூட்டணியில் சேர்ந்துள்ளேன்.

இந்த தொகுதி மக்களின் தேவைகள் என்ன என்பதை மக்களிடம் சென்று கேட்ட பின், வாக்குறுதிகளை தெரிவிப்பேன். இது விவசாய பகுதி என்பதால் என்னுடைய சொந்த நிதியிலிருந்து பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவைகளை நேரடியாக கொள்முதல் செய்யும் மையம் அமைப்பேன். இவ்வாறு பாரிவேந்தர் கூறினார்.

Tags
Show More
Back to top button
Close
Close