தினமும் சாலை விபத்துகள் நடந்து கொண்டிருக்கும் செய்திகளை நாம் நாளிதழ் மற்றும் தொலைக்காட்சியில் வெளிவந்து கொண்டுருக்கிறது.

இதற்கு முக்கிய காரணம் மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுவது, மற்றும் கவனக்குறைவு போன்ற காரணங்களை சொல்லி கொண்டே போகலாம்.

இந்நிலையில், துளு மொழி படங்களை இயக்கிய 30 வயதே ஆன இளம் இயக்குனர் ஒருவர் சாலை விபத்தில் மரணமடைந்துள்ளது திரைத்துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹாரிஸ் ஹூதுவால், என்கிற இளம் இயக்குனர் ஓட்டி வந்த கார் நிலை தடுமாறி, தெற்கு கர்நாடகாவை அடுத்த மூடபிடரி என்ற இடத்தில் சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது வேகமாக மோதியது. இதில் இயக்குனர் ஹாரிஸ் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

விபத்து பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Share