தமிழ் நாடு

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் மீது வழக்கு..!

மதுரையில் அனுமதியின்றி தேவர் சிலைக்கு மாலை அணிவித்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதுரையில் தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் வெங்கடேசன் போட்டியிடுகிறார். இவர் தனது வேட்பு மனுவை நேற்று தேர்தல் அதிகாரி நடராஜனிடம் தாக்கல் செய்தார். வேட்பு மனுத்தாக்கலில் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்கள் அதிகமாக கலந்து கொண்டனர்.முன்னதாக வெங்கடேசன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் தேர்தல் பறக்கும் படை தாசில்தார் தங்கமீனா தல்லாகுளம் போலீசில் இதுகுறித்து புகார் கொடுத்தார்.அதன் பேரில் வேட்பாளர் வெங்கடேசன் உள்ளிட்ட சிலர் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags
Show More
Back to top button
Close
Close