தமிழ் நாடு

என் மகனை போன்று இங்கிலீஸ் பேச முடியுமா.? சவால் விட்டு மூக்குடைந்த துரைமுருகன்.. அன்புமணி இருக்காருனு கதையை முடித்த நெட்டிசன்கள்.!

என் மகன் கதிர் ஆனந்த போல வேறு ஏதாவது வேட்பாளருக்கு ஆங்கிலம் பேச தெரியுமா? என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியிருந்தார்.

திமுக சார்பில் வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக கதிர் ஆனந்த் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் துரைமுருகனின் மகன் ஆவார்.
இந்நிலையில், கதிர் ஆனந்திற்கு ஆதரவாக துரைமுருகன் பிரச்சாரத்தை தொடங்கினார். அவர் பேசியது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

என்னுடைய மகனுக்கு அரசியல் தெரியமால் இல்லை. அவருக்கு சரளமாக ஆங்கிலம் தெரியும். நாடாளுமன்றத்துக்கு ஆங்கிலம் முக்கியம் தேவை. ஆங்கிலம் தெரியமால் நாடாளுமன்றம் செல்வதால் எந்த ஒரு பயனும் இல்லை. அதற்கு பதிலாக வீட்டிலேயே இருந்துடலாம்.

இப்போது இருக்கும் எம்.பிக்கள் யாரும் ஆங்கிலத்தில் பேசுவது இல்லை. என் மகன் நன்றாக ஆங்கிலம் பேசுவான். என் மகன் என்பதற்காக சொல்லவில்லை. அவன் நாடாளுமன்றத்தில் மிக சிறப்பாக ஆங்கிலத்தில் பேச இருக்கிறான்.

வேண்டும் என்றால் சவால் வைத்துக் கொள்ளலாம். எல்லா வேட்பாளர்களையும் ஆங்கிலத்தில் பேச வைக்கலாம். குறைந்தது அரை மணி நேரம் பேச சொல்லலாம்.

யார் ஆங்கிலத்தில் நன்றாக பேசுகிறார் என்று பார்க்கலாம். என் மகன் பேசும் அளவிற்கு யார் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள் என்று பார்ப்போம். இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இது போன்று பேசி முடித்த சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் வர துவங்கி விட்டன. பாமகவில் உள்ள அன்புமணிக்கு தமிழ், ஆங்கிலம் சரளமாக பேசும் வல்லமை கொண்டவர்.

துரைமுருகன் கூறுவதை போன்று ஆங்கிலத்தில் பேசுவதோடு மட்டுமின்றி, மக்கள் நலன்கள் பற்றிய புள்ளி விவரங்களோடு தொடர்ந்து பேசக்கூடியவர்.

அப்படிப்பட்ட ஒருவர் எதிர்க்கட்சி கூட்டணியில் இருக்கும்போது, இது போன்று வாய் விட்டு வீணாக மாட்டிக்கொண்டாரே என துரைமுருகனை சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

Tags
Show More
Back to top button
Close
Close