தமிழ் நாடு

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுக்கு நாடாளுமன்ற தேர்தலில் வாய்ப்பு வழங்கிய டிடிவி தினகரன்.!

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 3 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தந்துள்ளார் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.

அமமுக சார்பில் 24 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் 14 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்களும், 9 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மூன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் தர்மபுரி தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தேனி தொகுதிக்கு தங்க தமிழ்ச்செல்வன், மற்றும் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிக்கு பார்த்திபன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close