தலையின் விஸ்வாசம் படம் அவரது கடைசி படத்திற்கு ஒரு வருட இடைவேளையில் வெளியானது. காரணம் தமிழ் சினிமாவில் நடந்த ஸ்ட்ரைக்கால் தள்ளிப்போனது.
பொங்கலுக்கு வெளியான இப்படம் தாறுமாறான வரவேற்பை பெற்றது, வசூலிலும் மாஸ் காட்டியது. தயாரிப்பாளரே படம் தங்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்துவிட்டது என்றனர்.
படம் வெளியாகி 11 வாரங்கள் ஆகிவிட்டது, விஸ்வாசத்தை தொடர்ந்து நிறைய புதுப்படங்களும் வெளியாகிய வண்ணம் உள்ளது. அப்படங்கள் சரியான வெற்றி பெறவில்லை என்பதாலேயே திரையரங்க உரிமையாளர்கள் இப்போது ஒரு புதிய முடிவு எடுத்துள்ளனர்.
அதாவது மீண்டும் விஸ்வாசம் படம் ரீ-ரிலீஸ் செய்ய இருக்கிறார்களாம். மதுரையில் நாளையில் படம் ரீ-ரிலீஸ் ஆகிறதாம், அந்த இடத்தை தொடர்ந்து பல இடங்களில் விஸ்வாசம் ஆட்டம் மீண்டும் ஆரம்பமாக இருக்கிறது.

Share