தமிழ் நாடு

முதலில் திருமா, இப்போது வைகோ, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடியாது என திட்டவட்டம் – அதிர்ச்சியில் மு.க.ஸ்டாலின்! சலசலக்கும் தி.மு.க கூட்டணி?

கூட்டணி கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க மு.க.ஸ்டாலின் அழாத குறையாக மன்றாடி வருகிறார். வெளிப்படையாக இந்த ஆதங்கத்தையும் தெரிவித்து விட்டார்.

ஆனால், கூட்டணி கட்சிகள் யாரும் மதிப்பதாக தெரியவில்லை. முதலில், திருமாவளவன் தான் தனி சின்னத்தில் தான் போட்டியிடுவேன் என திட்டவட்டமாக அறிவித்து அவருக்கு பானை சின்னமும் ஒதுக்கப்பட்டு விட்டது.

இப்போது வைகோவும் கைவிரித்து விட்டர். ஈரோட்டில் ம.தி.மு.க வேட்பாளர் கணேசமூர்த்தி தனி சின்னத்தில் போட்டியிடுவார் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

இதை அறிந்த மு.க.ஸ்டாலின் நொந்து நூடல்ஸ் ஆகாத குறையாக எவனுமே நம்மள மதிக்க மாட்டேங்கிறானே என்று பொலம்பி வருகிறாராம்.

Tags
Show More
Back to top button
Close
Close