2019 தேர்தல்செய்திகள்

தமிழக பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் வெளியீடு: குமரி தொகுதியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று வேட்புமனு தாக்கல்

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 11 ந்தேதி தொடங்குகிறது. பா.ஜ.க வேட்பாளர் பட்டியலை எப்போது வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அக் கட்சியின் வேட்பாளர் பட்டியலை நேற்று கட்சியின் மூத்த நிர்வாகியும், மத்திய அமைச்சருமான ஜே.பி. நட்டா அறிவித்தார்.

இதன்படி முதல் கட்டமாக 184 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அதன்படி போட்டியிடுவோர் முக்கிய சிலரின் விவரம் வருமாறு:

வாரணாசி – நரேந்திர மோடி
ராஜ்நாத்சிங் -லக்னோ
நாக்பூர் – கட்காரி
காந்திநகர்: அமித்ஷா
முசாபர் நகர்- சஞ்சீவ்குமார்
மீரட்- ராஜேந்திர அகர்வால்
பாட்பட்- சத்யபால்
காஸியாபாத்; வி.கே.சிங்
மும்பை: கோபால் ஷெட்டி
அலிகார்- சதீஷ்குமார்
மதுரா; ஹேமாமாலினி
அமேதி: ஸ்மிருதி இராணி,
மதுரா; ஹேமாமாலினி
அமேதி: ஸ்மிருதி இராணி,
ரேபரேலி; சந்தோஷ்குமார்
சீத்தாபூர்; ராஜேஸ்வர்மா
சட்டீஸ்கர்: ரேணுகாசிங்
ஜெய்ப்பூர்: ராஜ்யவர்த்தன் ரத்தோர்
பெங்களூரு: சதானந்தகவுடா

தமிழக 5 தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள்

கன்னியாகுமரி: பொன்.ராதாகிருஷ்ணன்
சிவங்கை: எச்.ராஜா
கோவை: சி.பி.ராதாகிருஷ்ணன்
தூத்துக்குடி: தமிழிசை சவுந்திரராஜன்
ராமநாதபுரம்: நயினார் நாகேந்திரன் 

ஆகியோர் போட்டியிடுகின்றனர், என்று நட்டா கூறினார்.

கன்னியாகுமரி தொகுதியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தனி தேர்தல் அறிக்கை தயார் செய்து வெளியிடப்படும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு தந்த பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்

Tags
Show More
Back to top button
Close
Close