சினிமா

சோசியல் மீடியாவில் ட்ரெண்டான ‘‘பிஎம் நரேந்திர மோடி’’ திரைப்படத்தின் ட்ரைலர்.!

பிஎம் நரேந்திர மோடி திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
ஓமங்க் குமார் இயக்கத்தி விவேக் ஓப்ராய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பிஎம் நரேந்திர மோடி’. இந்த படத்தில் விவேக் ஓப்ராய் பிரதமர் மோடியின் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இத்திரைப்படத்தை சந்தீப் சிங், ஆனந்த் பண்டிட் மற்றும் சுரேஷ் ஓப்ராய் தயாரிக்கின்றனர். இந்தப் படம் மோடியின் கடந்த கால வாழ்க்கையில் தொடங்கி அவர் குஜராத் முதல்வராகவும், பின்னர் 2014 தேர்தலில் இந்திய பிரதமராகும் வரையுள்ள நிகழ்வுகளை கொண்டுள்ளது.

இந்தப் படத்தை ஜனவரி 7ம் தேதி மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தொடங்கி வைத்தார். இதன் படப்பிடிப்பு ஜனவரி மாதம் 28ம் தேதி மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. இந்த டிரெய்லரின் தொடக்கத்தில் 2014ம் ஆண்டு தேர்தலுக்கு தயாராகும் படங்கள் காட்டப்படுகின்றன.

அதன் பிறகு இளைஞராக மோடி தனது தாயிடம் சன்னியாசம் போவதாக கூறும் காட்சி இடம் பெற்றுள்ளது. அதன் பின்னர் அவர் இமய மலைகளில் இருக்கும் ஆன்மிக பெரியவர்களிடம் சில வருடங்கள் இருந்து விட்டு பின்னர் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் சேர்வது போன்ற காட்சிகள் இடம் பெறுகிறது.

மேலும், இந்திராகாந்தி ஆட்சியில் அவசர கால நிலையும் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளது. மொத்தமாக 2 நிமிடம் 35 விநாடிகள் கொண்ட டிரெய்லரின் காட்சியமைக்கப்பட்டுள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close