பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வாரணாசியில் மீண்டும் போட்டியிடுகிறார். அத்வானியின் காந்திநகர் தொகுதியில் அமித் ஷா போட்டியிடுகிறார்.

மக்களவை தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டு வருகிறது. பிரதமர் மோடி மீண்டும் வாரணாசியில் இருந்து போட்டியிட உள்ளார்.2014-ம் ஆண்டில் அத்வானி போட்டியிட்டு வென்ற காந்தி நகர் தொகுதியில் பாஜக தலைவர் அமித் ஷா போட்டியிட உள்ளார். அமித் ஷா தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.

லக்னோவில் ராஜ்நாத் சிங், நாக்பூரில் நிதின் கட்னரி, மதுராவில் ஹேமமாலினி போட்டியிட உள்ளனர்.

Share