தமிழ் நாடு

தி.மு.க தேர்தல் அறிக்கையின் குட்டு அம்பலமானது – நச்சுனு ஒரு பாயிண்டை பிடித்த நெட்டிசன்கள் : கதி கலங்க வைக்கும் அறிவிப்பு..!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், 10வது படித்த ஒரு கோடி பேருக்கு சாலைப் பணியாளர்கள் வேலை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது குறித்த சில சந்தேகங்கள் சமூக ஆர்வலர்கள் மூலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது.

அதில், தமிழகத்தில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் 1 கோடி சாலைப் பணியாளர்களை பணியமர்த்த முடியாமல் போனால் கூடப்பரவாயில்லை. இந்தியா முழுவதுமே தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகபட்சம் 5 லட்சம் பேர் மட்டுமே பணியமர்த்த முடியுமாம் சொல்கிறது புள்ளி விவரம்.

அதாவது கடந்த நவம்பர் 30ம் தேதி நிலவரப்படி இந்தியாவில் 1.13 லட்சம் கி.மீ. தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை உள்ளது. தற்போது 5.5 முதல் 7 கி.மீ. தூர சாலைக்கு ஒரு சாலைப் பணியாளர் வீதம் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அப்படியானால், திமுக சொன்னபடி இந்த 1.31 லட்சம் கி.மீ. தூரத்துக்குள் ஒரு கோடிப் பேரை நியமிப்பது எப்படி, ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு 76 பேரை நியமித்தால் மட்டுமே இது சாத்தியப்படும்’ என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதற்கு திமுக தரப்பில் இருந்து என்ன பதில் வரும் என்று தெரியவில்லை. பொறுத்திருந்து பார்க்கலாம்.

Tags
Show More
Back to top button
Close
Close