தமிழ் நாடு

மதுரையில் 80 கிலோ தங்க நகைகள் பறிமுதல்.. தேர்தல் பறக்கும் படை அதிரடி நடிவடிக்கை.!

மதுரை அருகே உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.10 கோடி மதிப்பிலான தங்க நகைகளை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி மக்களவை, மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தலில் முறைகேடுகளை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி சமயநல்லூர் பேருந்து நிலையம் அருகே தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சேலத்திலிருந்து மதுரையில் உள்ள ஒரு நகைக்கடைக்கு 10 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 80 கிலோ தங்க நகைகள் கொண்டுச் சென்றது கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து உரிய ஆவணங்கள் இல்லாததால் அனைத்து நகைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதன் பின்னர் நகைகளை சார்நிலை கருவூலத்தில் தேர்தல் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். இது தொடர்பாக வருமான வரித்துறையினர் சோதனையிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Tags
Show More
Back to top button
Close
Close