செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு – காங்கிரஸ் தலைவருக்கு தொடர்பா? சி.பி.சி.ஐ.டி சம்மன்! #PollachiSexualAbuse

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி விசாரித்து வரும் நிலையில், திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாரின் பெயர் இடம்பெற்றுள்ளதாக பாலிமர் செய்தி குறிப்பு கூறுகிறது.

மயூரா ஜெயக்குமார் காங்கிரஸ் செயல் தலைவராக நியமிக்கப்பட்ட போது அவரை சந்தித்து திருநாவுக்கரசு வாழ்த்து தெரிவித்ததாக  தகவல்கள் தெரிவிக்கின்றன என்று அந்த செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. இதைத் தொடர்ந்து மயூரா ஜெயக்குமாருக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர் என்றும், வரும் 25-ஆம் தேதி கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. கோவை மாவட்டம் ராமநாதபுரத்தைச் சேர்ந்த மயூரா ஜெயக்குமார், அண்மையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். இதற்கு முன்னதாக தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராக இவர் இருந்தார். 

சமீபத்தில் மயூரா ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rahul Gandhi with Mayura Jayakumar
Tags
Show More
Back to top button
Close
Close