தமிழ் நாடு

மேடையிலேயே தி.மு.க பெண் வேட்பாளரின் அழகை வர்ணித்த உதயநிதி ஸ்டாலின் – சந்தி சிரிக்கும் தி.மு.க-வின் தேர்தல் பரப்புரை அவலட்சணம்..!

தென் சென்னை திமுக பெண் வேட்பாளரை மேடையில் வைத்தே அழகாக இருக்கிறீர்கள் என வர்ணித்து உதயநிதி ஸ்டாலின் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, நேற்று திமுகவின் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டு விட்டது. இந்நிலையில் மக்களவை மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான பரப்புரையை திருவாரூரில் இருந்து மு.க.ஸ்டாலின் தொடங்கியுள்ளார்.

அதேபோல், தூத்துக்குடி நாடளுமன்றத்தொகுதியில் வேட்பாளர் கனிமொழி பரப்புரையை தொடங்கியுள்ளார். இந்நிலையில், தென்சென்னை தொகுதிக்கான திமுகவின் தேர்தல் பணிமனையை ஸ்டாலின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன்பின்னர் சைதாப்பேட்டை பகுதியில் தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு ஆதரவாக வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

சைதை பகுதியில் தமிழச்சி தங்கபாண்டியன் அறிமுக கூட்டம் சைதை மா.சுப்ரமணியன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின், வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியனை அழகாக இருக்கிறீர்கள் என்று வர்ணித்தார். மேலும் தென்சென்னை மக்களை கேட்டுக்கொள்வது என்னவென்றால் இவ்வளவு அழகான வேட்பாளரை நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

Tags
Show More
Back to top button
Close
Close