தமிழ் நாடு

மர்ம மரணம் அடைந்த சாதிக்பாட்சா மனைவி கார் மீது தி.மு.க-வினர் சரமாரி தாக்குதலா? காவல் துறை ஆணையரிடம் பாதுகாப்பு கேட்டு புகார்!

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அப்போதைய மத்திய அமைச்சர் அ.ராசா மற்றும் தி.மு.க தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் துப்பு துலக்க அ.ராசாவின் நண்பரும், கிரீன் ஹவுஸ் ப்ரோமோட்டர்ஸ் நிர்வாகியுமான சாதிக் பாட்சாவிடம் விசாரணை நடத்த சிபிஐ நடவடிக்கை மேற்கொள்ள இருந்தது.

இந்த நிலையில், கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16-ஆம் தேதி சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தனது வீட்டில் சாதிக் பாட்சா பிணமாகக் கிடந்தார். அந்த சம்பவம் நடந்து 8 ஆண்டுகள் கடந்து விட்டது. இந்நிலையில் சாதிக் பாட்சா மனைவி தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக புகார் கூறி இருக்கிறார். 

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பயத்துடன் பேசியபோது, “நேற்று இரவு அசோக் நகரில் இருந்து துரைப்பாக்கம் வந்து கொண்டிருந்தேன். துரைப்பாக்கம் சிக்னலுக்கு முன் நான் போய்க் கொண்டிருந்த காரை நேற்று யாரோ அடித்து நொறுக்கினார்கள். அது குறித்து கமிஷனரிடம் புகார் அளிக்க வந்தோம். அதை ஏற்றுக்கொண்டு கமிஷனர் பாதுகாப்பு அளிப்பதாக கூறியிருக்கிறார். எனது கணவரது நினைவஞ்சலி விளம்பரம் வெளியிட்டதற்கு பிறகு இது நடந்ததால் எனக்கு பயமாக இருக்கிறது.” என்றார்.

அந்த விளம்பரத்தில் கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கு நீ உவமையாய் ஆனாயே.. உன் அன்பு முகம் கூட அறிந்திடா உள் பிள்ளைகள்” என வாசகங்கள் அடங்கி இருந்தது. இது சாதிக் பாட்சாவின் நண்பராக இருந்த தி.மு.க முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவை குறிப்பிட்டு எழுதப்பட்ட வாசகங்கள் என தி.மு.க தரப்பு கொதித்துக் கிடக்கிடக்கிறது. ஆக, இந்த விளம்பரம் வெளியானதால் கோபமான தி.மு.க தரப்பினர் இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கலாம் என ரெஹானா பானு தரப்பினர் கூறுகின்றனர்.

இந்த தாக்குதலில் கார் கண்ணாடி மற்றும் கார் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. 

Tags
Show More
Back to top button
Close
Close