பெங்களூரு நகரில் உள்ள மிகப்பெரிய ஐ.டி பார்க்கில் ஒன்றான மான்யாத்தா எம்பசி பிஸ்னெஸ் பார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் பங்குபெற்றார். ராகுல் காந்தி அங்கு வருவதை அறிந்த ஐ.டி ஊழியர்கள், அவர் வருவதற்கு சற்று நேரத்திற்கு முன்பாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்திற்கு அருகில் ஒன்று கூட துவங்கினர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னாள் எதிர்பாராத விதமாக அனைவரும் “மோடி மோடி” என்று கோஷமிட துவங்கினர். இந்த கோஷம் அந்த பகுதி முழுவதும் பரவி, ஐ.டி ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர் அங்கு கூடி “மோடி மோடி” என்று விண்ணை பிளக்கும் அளவிற்கு கோஷம் இட்டனர்.

இந்த நிலையில், நேற்று உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மிர்சாபூருக்கு ராகுல் காந்தியின் தங்கையான பிரியங்கா வத்ரா சென்றார். அப்போது அங்கு கூடியிருந்த பொது மக்கள் அவருக்கு “மோடி மோடி” கோஷத்துடன் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

Tweet by ANI UP

காங்கிரஸ் தலைவர்கள் எங்கு சென்றாலும் மோடி மோடி கோஷத்துடன் மக்கள் அவர்களை வரவேற்பது காங்கிரஸ் கட்சியினரை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது.

Share