இந்தியாஊடக பொய்கள்

பிரதமர் கார்பரேட்டுகளுக்கு சாதகமானவர் என்றால் ஏன் ரிலையன்ஸ் திவாலாகும் நிலைக்கு சென்றது..? சமூக போராளிகள் பெயரில் ஊடுருவிய புல்லுருவிகள் மேற்கொண்ட சதி..!

இந்தியாவின் முக்கிய தொழிற்துறை ஜாம்பவான்களில் ஒருவரான அனில் அம்பானிக்கு இது போதாத காலம் போல.

சுவீடன் நிறுவனமான எரிக்ஸன் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய கடனை முறையாக செலுத்தத் தவறியதால் எரிக்ஸன் நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது. இதையடுத்து உச்சநீதிமன்றம் அனில் அம்பானியை கடுமையாக எச்சரித்து கடனை செலுத்த காலக்கெடுவையும் நிர்ணயித்து, அதற்குள் செலுத்த தவறினால் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என எச்சரிக்கையும் விடுத்திருந்தது. கடனை திருப்பிச் செலுத்த அனில் அம்பானி பல்வேறு வழிகளில் முயன்றாலும் அவரால் பணத்தை புரட்ட முடியாத சூழ்நிலையே நிலவியது. இதையடுத்து அனில் அம்பானி சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடுமோ என்று நினைத்த நேரத்தில், எநிர்பாராத விதமாக தனது தம்பிக்கு முகேஷ் அம்பானி கை கொடுத்து உதவியுள்ளார். இதனால் அனில் அம்பானி சிறை செல்வது தவிர்க்கப்பட்டு விட்டது.

இதையடுத்து அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் எரிக்ஸன் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய கடன் ₹458.77 கோடியை நேற்று திருப்பிச் செலுத்தியது. கடந்த மாதம் உச்சநீதிமன்றம் எரிக்ஸன் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை நான்கு வாரங்களுக்குள் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும் அதன் இரண்டு இயக்குநர்களும் செலுத்த வேண்டும் எனவும் இல்லையென்றால் மூன்று மாத சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் உத்தரவிட்டிருந்தது.

கடனை செலுத்திய பிறகு அனில் அம்பானி வெளியிட்ட அறிவிப்பில் “கண்ட காலங்களில் உடனிருந்தும், சரியான நேரத்தில் உதவியும் செய்த நான் மிகவும் மதிக்கும் அண்ணன் முகேஷ் அம்பானி மற்றும் அண்ணி நீதா அம்பானி இருவருக்கும் எனது இதயப்பூர்வ நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டார்.

தொலைத் தொடர்பு மற்றும் எரிசக்தித் துறையில் மிகப் பெரும் சரிவை கடந்த பல ஆண்டுகளாகவே சந்தித்து வரும் அனில் அம்பானி, அண்ணனிடமிருந்து கிடைத்த இந்த உதவியை மிக நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.கடந்த 2002ம் ஆண்டு தந்தை திருபாய் அம்பானி காலமான பிறகு அண்ணன் தம்பி இருவரும் சொத்துக்களை பிரித்துக் கொண்டனர். முகேஷ் அம்பானி எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தொழில்களையும், அனில் அம்பானி தொலைத் தொடர்பு மற்றும் எரிசக்தித் துறையையும் எடுத்துக் கொண்டனர். எனினும் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை எதுவும் இல்லாமலே இருந்தது. இதையடுத்து 2010ம் ஆண்டு அன்னை கோகிலா பென்னின் முயற்சியால் இருவருக்கும் இடையே இருந்த பிரச்சினைகளை மறந்து ஓரளவுக்கு சமாதானமாயினர். இதையடுத்து அண்ணனின் மீது நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் அவதூறாக எழுதியதாக கூறி ₹10000 கோடி மான நஷ்ட வழக்கு பதிந்ததை திரும்பப் பெற்றார். அதற்கு பிறகு கடந்த மாதத்தில் அண்ணன் வீட்டு திருமண நிகழ்வுகளில் கலந்து கொண்டு உறவை மேலும் வலுப்படுத்திய நிலையில் தான் அண்ணன் முகேஷ் அம்பானியின் திடீர் உதவி அனில் அம்பானிக்கு மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

எதற்கெடுத்தாலும் கார்பரேட்களுக்கு சலுகை செய்கிறது என்று ஆளும் அரசை குறை கூறும் போலி சமூக போராளிகள் இதன் மூலமாகவாவது உண்மை நிலையை உணர வேண்டும். போலி நிறுவனங்களை களை எடுப்பதில் அரசு முனைப்பாக உள்ளது. நிறுவனங்களை முறைப்படுத்தப்பட்ட வரம்புக்குள் கொண்டு வருவதில் தீவிரமாக உள்ளது. முறைகேடுகளை தடுக்க அரசு மேற்கொள்ளும் முயற்சி, வேறு விதமாக திசை திருப்பப்பட்டு வருகிறது. இந்த சூழ்ச்சியை உணர்ந்து செயல்பட்டாலே அரசின் மீதான நம்பகத்தன்மை அதிகரித்து தேசத்தின் வளர்சிக்கான பங்கெடுப்பை ஒவ்வொருவரும் அளிப்பார்கள்.

Tags
Show More
Back to top button
Close
Close