செய்திகள்

ராகுல் திறந்து வைத்த இந்திரா கேன்டீன் உணவுகள், மனிதர்கள் உட்கொள்ள உகந்ததல்ல : ஆய்வறிக்கை தகவல் !

இரண்டு ஆய்வகங்கள் மூலம் கிடைத்த தரவுகள் படி, பெங்களூரு நகரில் உள்ள சில இந்திரா கேன்டீன் உணவகங்களில் விற்கப்படும் சாதம், சாம்பார், பிசி பேலே பாத் உள்ளிட்ட உணவுகள் மனிதர்கள் உட்கொள்ள உகந்ததல்ல என்று தெரிய வந்துள்ளது.

அரசு நடத்தும் பொது சுகாதார நிறுவனம் மற்றும் ராமையா மேம்பட்ட சோதனை ஆய்வகம் ஆகியவற்றால் நடத்தப்பட்ட சோதனைகளில், இந்திரா கேன்டீன் விற்கும் உணவுகளில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை ஆகியவை இருப்பது கண்டறியப்பட்டன.

Test Report by Ramaiah Lab. Source : Deccan Herald
Test report by Ramaiah Lab. Source : Deccan Herald

தமிழகத்தில் செயல்படும் அம்மா கேன்டீன் போல கர்நாடகாவில் இந்திரா கேன்டீன் என்ற உணவகத்தை கர்நாடக மாநில முன்னாள் காங்கிரஸ் முதல்வர் சீத்தராமையா தொடங்கினார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த திட்டத்தை துவங்கி வைத்தார். அப்போது பேசுகையில், இந்திரா கேன்டீன் என்று கூறுவதற்கு பதிலாக அம்மா கேன்டீன் என்று உளறி பிறகு சுதாரித்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த உணவகத்தில் காலை உணவு ஐந்து ரூபாய்க்கும், மதிய உணவு பத்து ரூபாய், இரவு உணவு பத்து ரூபாய் என்ற விலையில் வழங்குகின்றனர்.

Tags
Show More
Back to top button
Close
Close