தமிழ் நாடு

இன்று மதியத்திற்குள் நீங்கள் எதிர்பார்த்தது நடக்கும் – தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் முக்கிய அறிவிப்பு..!

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களின் பட்டியல் இன்று மதியத்திற்குள் வெளியிடப்படும் என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க பா.ம.க, தே.மு.தி.க, த.மா.கா, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த கூட்டணியில் அ.தி.மு.க-வுக்கு 20, பா.ஜ.க.வுக்கு 5, பா.ம.கவுக்கு 7, தே.மு.தி.க-வுக்கு 4, த.மா.கா, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகியவற்றுக்கு தலா 1 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் அ.தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை ஏற்கெனவே வெளியிட்டுள்ளன. ஆனால் பா.ஜ.க தரப்பில் இன்னும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படவில்லை.

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
தமிழகத்தில் பா.ஜ.க சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் உத்தேச பட்டியல், தில்லியில் உள்ள கட்சியின் மத்திய தேர்தல் குழுவிடம் நேற்று நேரில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அக்குழு வேட்பாளர்களை இறுதி செய்து, இன்று மதியத்துக்குள் பா.ஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுவிடும். தி.மு.கவிலேயே இடஒதுக்கீடு இல்லாதபோது, தனியார் துறையில் எப்படி இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும் எனத் தெரியவில்லை.

மொத்தத்தில், தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை வானத்தில் கோட்டை கட்டுவது போல உள்ளது’ என்று அவர் தெரிவித்தார்.

Tags
Show More
Back to top button
Close
Close