உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு உத்தரப்பிரதேசத்தில் ஒரு சிறிய வன்முறை சம்பவங்கள் கூட நடக்கவில்லை என்றும் முந்தைய நிலை மாறி இப்போது மக்களின் அபிப்பிராயமே மாறிவிட்டதாக மாநில முதல்வர் ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

மேலும், மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில் மாநில அரசு குற்றம் மற்றும் குற்றவாளிகளை கொஞ்சம் கூட சகித்துக் கொள்ளாமல் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் ஆதித்யநாத் கூறினார்.

தனது ஆட்சிக் காலத்தின் ரிப்போர்ட் கார்டை வெளியிட்டுப் பேசிய ஆதித்யநாத், உத்தரப்பிரதேசம்தான் மாநிலத்தின் ஒட்டுமொத்த அமைதிக்கும் ஒரு உதாரணமாக விளங்குவதாகவும், உத்தமமான மாநிலமாக மாறிவருவதாகவும், மாநிலத்தின் மீதான இந்திய மக்களின் அபிப்ராயத்தையே பாஜக தலைமையிலான ஆட்சி மாற்றிவிட்டது என்றும் ஆதித்யநாத் பெருமைப்பட பல்வேறு புள்ளி விவரங்களின் அடிப்படையில் கூறினார்.

Share