தமிழ் நாடு

ஜி.கே.மூப்பனாரின் சகோதரர் ஜி.ரங்கசாமி மூப்பனார் காலமானார்: Dr. தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல்.!

மறைந்த தலைவர் ஜி.கே.மூப்பனாரின் சகோதரர் ஜி.ரங்கசாமி மூப்பனார் மறைவுக்கு தமிழக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்களில் கூறியுள்ளதாவது:

த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் அவர்களின் சித்தப்பாவும், ஜி.கே.மூப்பனார் அவர்களின் சகோதரர் ஜி.ரங்கசாமி மூப்பனார் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். அவரை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கும் த.மா.காவினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரது ஆன்ம சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

தேசிய குடும்பத்தில் வந்த அவரது பணி அரசியலையும் தாண்டி திருவையாறு ஸ்ரீ தியாகப்பிரம்ம மகோத்ஸவ சபை தலைவராகவும் அவர் ஆற்றிய கலை சேவை மற்றும் பொது நல சேவையும் போற்றுதற்குரியது. அவர் என்றும் நம் தேசிய நெஞ்சங்களில் வாழ்வார் . இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி.ரங்கசாமி மூப்பனார் பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags
Show More
Back to top button
Close
Close