தமிழ் நாடு

வேலையை காட்டியது… பொள்ளாச்சி விவகாரத்தை அரசியலாக்கும் திமுக – கொங்கு மண்டலத்தில் காலூன்ற மேற்கொள்ளும் தந்திரம்..?

17-ஆவது மக்களவைத் தோ்தலின் முதன்மைப் போட்டியாளா்களான அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே 8 தொகுதிகளில் நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. அதில், முதல்வரின் சொந்தத் தொகுதியான சேலம் உள்பட பொள்ளாச்சி, திருவண்ணாமலை, நீலகிரி (தனி), திருநெல்வேலி, மயிலாடுதுறைற, காஞ்சிபுரம் (தனி), சென்னை தெற்கு ஆகிய 8 தொகுதிகள் உள்ளன. 

மேலும், திமுகவின் கூட்டணிக் கட்சிகளான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் தொகுதியிலும், இந்திய ஜனநாயகக் கட்சி பெரம்பலூா் தொகுதியிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன. அதைப்போல, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதற்கு ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகளில் விழுப்புரம் (தனி) தொகுதியில் மட்டும் உதயசூரியன் சின்னத்தில் அக்கட்சி போட்டியிடுகிறது. இந்த 3 கட்சிகளின் தொகுதிகளையும் சோ்த்து அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே 11 தொகுதிகளில் நேரடிப் போட்டி உருவாகியுள்ளது. 

தோ்தலில் கொங்கு மாவட்டங்கள் திமுகவுக்கு எப்போதும் பெரியஅளவில் கைகொடுப்பதில்லை. கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில், கொங்கு மாவட்டத் தொகுதிகளில் அடைந்த தோல்வியால், திமுகவால் ஆட்சியைப் பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இந்தப் பயத்தின் காரணமாகவே கொங்கு மாவட்டங்களில் உள்ள தொகுதிகளைப் பெரும்பாலும் கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக ஒதுக்கிவிட்டு, தங்களுக்குச் சாதகமாக உள்ள வடமாவட்டங்களில் அதிக இடங்களில் போட்டியிடுகிறது. இந்த நிலையில் கொங்கு மாவட்டத்தில் பொள்ளாச்சி தொகுதியில் மட்டும் திமுக போட்டியிட முன்வந்துள்ளது. பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவ பிரச்னை தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், அந்தத் தொகுதி தங்களுக்குச் சாதகமாக மாறலாம் என்ற நம்பிக்கையில் அந்தத் தொகுதியில் நிற்கிறது. 

Tags
Show More
Back to top button
Close
Close