பிரபல நடிகை பூஜாகாந்தி சொகுசு ஹோட்டலில் தங்கிய பின்பு அதற்கான பில் தொகையை கொடுக்க பணம் இல்லாததால், அங்கிருந்து ஓட்டம் பிடித்த சம்பவம் திரைதுறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்தவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் நடிகை பூஜா காந்தி.

கடந்த சில மாதங்களாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் இவர் நிதி நெருக்கடி பிரச்சனையில் சிக்கி கஷ்டப்படுவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பெங்களூருவில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் பூஜாகாந்தி ரூம் எடுத்து தங்கியுள்ளார்.

ஆனால் ஓட்டலில் தங்கியதற்கான பில் ரூபாய் 4.5 லட்சம் தொகையை செலுத்தாமல் அங்கிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார்.

ஒரு சில நாட்கள் காத்திருந்த ஹோட்டல் நிர்வாகம், பூஜா காந்தியிடம் இருந்து எந்த பதிலும் வராததால், 4.5 லட்சம் பில் தொகையை கொடுக்காமல் ஏமாற்றி விட்டு சென்றதாக, நடிகை மீது காவல் துறையில் புகார் அளித்தனர். பின்னர் போலீசார் பூஜா காந்தியை விசாரணை செய்தனர்.

அப்போது முதல் கட்டமாக 2 லட்சத்தை ஓட்டல் நிர்வாகத்திடம் கொடுத்த பூஜா காந்தி, மீதமுள்ள பணத்தை பின்னர் தருவதாக கூறியதைத் தொடர்ந்து சில நாட்கள் அவருக்கு கெடு கொடுக்கப்பட்டது. இந்த சம்பவம் சினிமா துறையினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Share